பதட்டப்படாம இருந்தா 12 மணி நேரம் உயிரோட இருக்கலாம்: நயன்தாராவின் ‘O2’ டீசர்

பதட்டப்படாமல் அமைதியாக இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம் என்று நயன்தாரா பேசும் வசனத்துடன் முடியும் ‘O2′ படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா, ரித்விக் உள்பட பலரது நடிப்பில் ஜி கே விக்னேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘O2′ . இந்த படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

அதில் பதட்டப்படாமல், அமைதியாக சண்டைபோடாலம் இருந்தால் 12 மணி நேரம் உயிரோடு இருக்கலாம் என நயன்தாரா ஒரு குழந்தையை கையில் வைத்து கொண்டு பேசும் வசனம் மட்டும் உள்ளது. இந்த டீசரின் ஒரு நிமிட காட்சிகளும் செம திரிலிங்கான இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் சந்திரசேகர் இசையில் தமிழழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரித்துள்ளனர்.