பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன.. ‘நானே வருவேன்’ படத்தின் மயக்கும் பாடல்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

அண்ணன் தம்பி என்ற இரண்டு வித்தியாசமான கேரக்டரில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியது மட்டுமின்றி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் உருவாகிய இந்த பாடலின் முதல் சில வரிகள் இதோ:

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன
பிள்ளை பிறை சொல்லும் செய்தியும் என்ன
அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன
அந்தி பகல் மாறுவதென்ன
முத்துமணிச்சுடர் மோதுவதென்ன
முன்னம் செய்த தவமோ என்ன
கன்னக்குழி கதை நீளுவதென்ன
கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன
பால்முகம் பகல் இரவை மாற்றுவதென்ன
பசுந்தளிர் என ஆக்குவதென்ன
கலங்கரை அவள் பார்வையே