கோப்ரா படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பா. விஜய் எழுதிய ஆதிரா என்ற சிங்கிள் பாடலின் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.