13 லட்சம் பணப்பெட்டி ; வெளியேறிய இன்னொரு போட்டியாளர்!

பிக் பாஸ் 6ம் சீசன் இறுதி வாரத்தில் தற்போது இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் பைனல் என்பதால் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என தெரிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் தற்போது போட்டியாளர்களுக்கு பணப்பெட்டியை எடுத்து செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கதிரவன் 3 லட்சம் ருபாய் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

அமுதவாணன் எடுத்த பணப்பெட்டி தொகை

இந்நிலையில் இன்று மற்றொரு முக்கிய போட்டியாளரான அமுதவாணன் பணப்பெட்டி உடன் வெளியேறி இருக்கிறார். அவர் 13 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.