ஜோதி கொடுத்த அதிர்ச்சி.. தீவிரவாதிகள் வைத்த கோரிக்கை, சந்தியா போட்ட திட்டம் – ராஜா ராணி 2 இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜோதி தான் அந்த தேவராஜ் அந்த கருப்பு ஆடு என சந்தியா அனைவருக்கும் நிரூபிக்க பொலிஸ் அப்துல்லை ரிலீஸ் செய்கிறது.

அடுத்து ஜோதியை ஒரு சேரில் கட்டி வைத்து விசாரணை செய்ய முயற்சி செய்ய ஜோதி என் உயிர் போறவரைக்கும் என்கிட்ட இருந்து எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு கிடைக்காது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் கூடிய விரைவில் அடுத்து நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல் எங்களது தரப்பில் இருந்து தெரிய வரும் என சொல்கிறாள்.

அடுத்து ஒரு பாக்ஸ் கேம்ப் பக்கத்தில் இருந்ததாக பொலிஸ் குமரேசன் கொண்டு வந்து கொடுக்க அதில் ஒரு பென் ட்ரைவ் இருக்க அதை போட்டு பார்க்க செல்வம் பேசுகிறான். 10 கோடி ரூபாய் பணமும், தீவிரவாதிகளை ரிலீஸ் செய்ய வேண்டும் எனவும் டிமாண்ட் வைக்கின்றனர். அதோடு இதெல்லாம் நடக்கவில்லை என்றால் சென்னையில் மூன்று முக்கிய இடங்களில் அடுத்தடுத்து பாம் வெடிக்கும் என எச்சரிக்கின்றனர்.

அடுத்து கௌரி தீவிரவாதிகளிடம் உங்க திட்டம் பளிக்காது என சொல்ல செல்வம் நடக்கும் என உறுதியாக கூறுகிறார். இந்த பக்கம் பொலிஸ் என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்க சந்தியா ஒரு திட்டத்தை சொல்கிறார்.

பின்னர் ஜோதியை வேறு இடத்துக்கு மாற்ற சந்தியா நீ ரொம்ப நல்லவனு எனக்கு தெரியும், இதுல இருந்து வெளியே வந்துரு என சொல்ல ஜோதி கண்ணீர் விடுவது போல நடித்து அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.