வேறு சேனலுக்கு தாவிய செம்பருத்தி ஷபானா! அடுத்த சீரியல் இதுதான்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலமாக புகழின் உச்சிக்கே சென்றவர் ஷபானா. அந்த தொடர் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்யன் வேற்று மதத்தை சார்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் ஒப்புதல் கிடைக்காத நிலையில், அவர்கள் திருமணத்தில் ஷபானாவின் குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது.

சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஒருபக்கம் இருக்க, செம்பருத்தி சீரியல் சில வாரங்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.

அடுத்து ஷபானா என்ன சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். தற்போது அது பற்றிய விவரம் வெளிவந்து இருக்கிறது. சன் டிவியில் ஜோடி என்ற தொடரில் தான் ஷபானா நடிக்க இருக்கிறார்.

இந்த சீரியலின் பூஜை இன்று நடந்து முடிந்திருக்கிறது.