திரும்ப வந்துட்டேன்னு சொல்லு – ஸ்ரீநிதி

சின்னத்திரை நடிகையான ஸ்ரீநிதி சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் சர்ச்சையான பதிவுகளால் பெரும்புயலை கிளப்பினார்.

ஒருக்கட்டத்தில் நண்பர்களும், ஸ்ரீநிதியின் தாயருமே ஸ்ரீநிதிக்கு மனநலம் சரியில்லை என பேட்டி கொடுத்தனர்.

அதன்பிறகு சிகிச்சைக்காக கவுன்சிலிங்கிற்காக ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையெல்லாம் முடிந்து வெளியே வந்துள்ள ஸ்ரீநிதி, வழக்கம் போல் இண்ஸ்டாவில் ஆக்டிவாக ஆரம்பித்துவிட்டார்.

அவர் தனது இண்ஸ்டாவில் ‘நான் திரும்ப வந்துட்டேன்னு’ சொல்லு என்ற கேப்ஷனுடன் அண்ணாமலை படத்தின் டயலாக் வீடியோவை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

அவர் குணமடைந்ததற்கு சிலர் வாழ்த்துகளை கூறிவரும் நிலையில், ‘ஐய்யய்யோ திரும்ப வந்துடுச்சா?’ என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.