வசமாக சிக்கிய கோபி.. ஆதாரத்தை காட்டி பாக்கியா கேட்ட அடுக்கடுக்கான கேள்விகள்

இன்றைய எபிசோட்டில் கோபி ரூமில் படுத்து கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த பாக்கியா இனியாவின் ரூமுக்கு போனீங்களா என கேட்க நான் எதுக்கு அங்க போக போறேன் என கோபி பொய் சொல்கிறார்.

என்கூட வேலை பாக்குற ராஜி உங்களை ஸ்கூல்ல பார்த்திருக்கா என சொல்ல என்ன என்னை வேவு பார்க்குறியா என கோபி சத்தம் போடுகிறார்.

நான் எங்க வேணா போவேனே அத உன் கிட்ட சொல்லிகிட்டு இருக்க முடியாது, நீ என்ன என்ன கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீ எப்போ சிபிசிஐடி போலீசா ஆன என கோபி கோபப்படுகிறார்.

உங்க மேல இருந்த நம்பிக்கையை எனக்கு போயிடுச்சு என சொல்லிவிட்டு பாக்கியா பேச கோபி சத்தம் போட்டு விட்டு வெளியே எழுந்து வந்து விடுகிறார்.

பிறகு பாக்கியா கோபியின் காரிலிருந்து ஜாக்கெட் பின் ஒன்றை எடுத்த ஞாபகம் வந்து அந்த பில்லை தேடி எடுக்கிறார்.

அதன் பிறகு ஏதோ ஞாபகத்தில் இருக்க அப்போது செல்வி விழுந்து வீட்டிற்கு கிளம்புவதாக சொல்ல பாக்கியா அமைதியாக நிற்க செல்வி என்ன எது எனக் கேட்டு இப்படியே அமைதியா இருந்தா சார் உன்ன கொட்டி கிட்டே தான் இருப்பாரு, அநியாயம் எங்கே நடந்தாலும் அதை தட்டிக் கேட்கனும். வீடா இருந்தா வாய மூடிட்டு இருக்க கூடாது என கூறுகிறார்.

இதனையடுத்து பாக்கியா மீண்டும் கோபியின் ரூமுக்கு சென்று இது உங்க கார்ல இருந்து எடுத்தேன் என ஒரு மருந்துச் சீட்டை கொடுக்கிறார். அப்பாவுக்கு ஏதாவது மெடிசன் வாங்கியதாக இருக்கும் என கூறுகிறார்.

இல்ல அப்போ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவரோட குழந்தைக்கு வாங்கிய மெடிசன் அப்படின்னு சொன்னீங்க என சொல்ல அதான் அப்பவே சொல்லிட்டேன் நீ இப்ப எதுக்கு கேக்கிற என சத்தம் போடுகிறார்.

பிறகு ஜாக்கெட் பில்லை கொடுத்து இது யாருக்கு உங்க ஆபீஸ்ல இருக்கவங்க யாருக்காவது தச்சு கொடுத்தீங்களா என கேட்க கோபி வசமாக மாட்டிக் கொண்டோமே என நினைக்கிறார்.

என்ன பாக்கியா இப்படி கேள்வி மேல கேள்வி கேட்கிற என என நைசாக நழுவப் பார்த்தார். ஆனால் பாக்கியா என் வாழ்க்கையில என்னதான் நடக்குது? நைட்ல யார்கிட்டயும் டார்லிங், செல்லமேனு பேசிகிட்டு இருக்கீங்க இப்படிதான் பேசுவீங்களா??

இங்கே என் கூட பிடிக்காமல்தான் வாங்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும் நம்ம பிள்ளைங்க நம்பள பார்த்துதான் எதுவாக இருந்தாலும் கற்றுக் கொள்வார்கள், அதனால எல்லாத்தையும் சகித்துக்கொண்டு நீங்க இந்த குடும்பத்துக்காக இருப்பீங்கன்னு நம்பிக்கை இருந்தது ஆனால் இப்போ எனக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை.

உங்களுக்காக இப்போ நான் என்ன பண்ணனும் வீட்டை விட்டு வெளியே போகலாமா என கேள்வி மேல் கேள்வி கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மேலும் சுவாரஸ்யமான விஷயங்களை காண ஹாட்ஸ்டாரில் இன்றைய எபிசோடை பாருங்க.