லட்சுமியைத் திட்டித்தீர்த்த கண்ணம்மா.. வீட்டுக்கு வந்ததும் பாரதி செய்த வேலை, வெண்பாவுக்கு காத்திருந்த ஷாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா, ரோகித்திடம் தான் பாரதியை காதலிப்பதாக அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்க போகிறேன்.

பாரதிக்கு விவாகரத்து கிடைத்ததும் எங்களுக்கு திருமணம் என சொல்ல இதைக் கேட்டு அவர் அதிர்ச்சி ஆனது போல நடித்து பின்னர் சிரிக்கிறார். எதுக்கு இப்ப லூசு மாதிரி சிரிக்கிறாய் என வெண்பா கேட்க உன்ன பத்தி சொல்லும்போது உங்க அம்மா எல்லா விசயத்தையும் சொல்லிடாங்க.

பாரதி பின்னாடி பத்து வருசமா சுத்தியதும் அவரை கல்யாணம் பண்ணிக்க நீ என்னவெல்லாம் செய்தாய் என எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார்கள்.

அதையெல்லாம் மறந்து விடு இனிமேல் நம்மளுடைய எதிர்காலத்தை பற்றி யோசிக்கலாம் என கூறி அங்கிருந்து வெளியே சென்று விடுகிறார்.

இந்தப் பக்கம் வீட்டுக்கு வந்த கண்ணம்மா பாரதி தன்னை திட்டிய கடுப்பில் லட்சுமி தான் ஹேமாவிடம் விவாகரத்து பற்றி சொல்லி இருக்க வேண்டும் என அவரை திட்டி தீர்க்கிறார்.

லட்சுமி டாக்டர் அப்பா உன்னை திட்டினால் நீ அவரை திட்டு என் மேல எதுக்கு கோபத்தை காட்ட என்ன நடந்துச்சு என்ன ஏது என கேட்டேன் நீ ஹேமாவிடம் எதற்கு விவாகரத்து பற்றி சொன்ன என கேட்க நான் எதுவும் சொல்லவில்லை என நடந்த விஷயத்தை கூறுகிறார்.

பிறகு கண்ணம்மா உண்மை தெரிந்ததும் லட்சுமியிடம் சாரி கேட்டு டிபன் செய்து கொடுக்கிறார். ‌

இந்த பக்கம் வெண்பா வீட்டுக்கு வந்ததும் மீண்டும் ரோகித்திடம் இதைப்பற்றி பேச ரோகித் தன்னிடம் ஷர்மிளா பேசிய டீலிங் குறித்து கூறுகிறார்.

உனக்கு பாரதியுடன் கல்யாணம் ஆகி இருந்தால் கூட பரவாயில்லை அதெல்லாம் எனக்கு கவலை இல்லை அது எல்லாவற்றையும் மறந்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.

இவனை எப்படி சமாளிக்கிறது எதை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவானே புரிய மாட்டேங்குது என புலம்பி தவிக்கிறார் என்றார்.

அதன் பின்னர் வீட்டில் அகிலன் பாரதியின் அப்பா அம்மா என மூவரும் அமர்ந்து ஹேமா ஸ்கூல் விழாவில் நடந்து கொண்டதை பற்றி சந்தோஷப்படுகின்றனர்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த பாரதி உங்களுடைய நாடகத்தில இப்போ அந்த சின்ன குழந்தையும் சேர்ந்து விட்டீர்களா? என சத்தம் போட சௌந்தர்யா நான் எதுவும் சொல்லல என கூறுகிறார்.

ஆனால் பாரதி நீங்க சொல்லாம எப்படி ஹேமா இப்படியெல்லாம் நடந்துக்குவா? இன்னைக்கு பேசுனது கூட நீங்க எதுவும் சொல்லித் தராம யாரோ அவள் கனவுல போய் சொல்லிக் கொடுத்தாங்களா என சத்தம் போட்டுவிட்டு உள்ளே சென்று விட்டார்.

பிறகு பாரதி ஹேமா தூங்கிக் கொண்டிருக்க அவள் பக்கத்தில் அமர்ந்து இவ வேற கேள்வி மேல கேள்வி கேட்கிறா, எப்படி ஃபேஸ் பண்ண போறேன்னு தெரியல என பேசுகிறார்.

இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.