சந்தியாவை பாராட்டிய பொலிஸ் ; சிவகாமி செய்த வேலையால் அதிர்ச்சியான குடும்பம்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சர்க்கரையில் உடம்பிலிருந்த குண்டை வெற்றிகரமாக நீக்கி அதை தூக்கி போட்டு மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து தென்காசியை சரவணன் காப்பாற்ற பிறகு பொலிஸார் வந்து சந்தியா சரவணன் என இருவரையும் பாராட்டுகின்றனர்.

பொலிஸ் அதிகாரி தன்னுடைய கேப்பை கழட்டி சந்தியாவிற்கு அணிவித்து இது இருக்க வேண்டிய இடம் இது தான் இவ்வளவு பொலிஸ் இருந்தும் உங்களுடைய துணிச்சலான செயல் தான் இவ்வளவு பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது என பாராட்டுகிறார்.

சந்தியாவை பொலிஸ் பாராட்ட அனைவரும் கைதட்ட உடனே சிவகாமி ஓடி வந்து கட்டி பொலிஸாரிடம் கொடுத்து இது உங்க கிட்டயே இருக்கட்டும். சந்தியா ஒரு நல்ல மருமகளாக இருந்தால் போதும் அதுதான் என்னுடைய ஆசை. அவளுடைய ஆசையும் அதுதான் சும்மா அவளை ஏற்றி விட வேண்டாம் என கூறிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு பார்வதியை பார்க்க கிளம்புகிறார்.

பிறகு எல்லோரும் பார்வதியைப் பார்த்து அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர். மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என கூறுகிறார்.

பிறகு சந்தியா இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வர பின்னர் பார்வதி மற்றும் பாஸ்கர் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பேசிக் கொண்டிருந்தனர்.

இனிமே உன்னுடைய கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது என பாஸ்கர் ஆறுதல் கூறுகிறார். இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க திடீரென போலீஸ் உள்ளே வருகிறது.

பிறகு பார்வதியிடம் செல்வம் கடத்தி வைத்து அதிலிருந்து அவர்கள் போட்ட திட்டம் என்னென்ன என்பது குறித்து முழுமையாக கேட்டறிகின்றனர். ‌

அதன்பிறகு சந்தியாவும் சரவணனும் டாக்டரை சந்தித்து ஃபீஸ் எவ்வளவு பார்வதியை எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாம் என கேட்க அவர் ஒரு நாள் மட்டும் ஓய்வில் இருந்து விட்டு மறுநாள் அழைத்துச் செல்லுங்கள் என கூறுகிறார்.

மேலும் பீஸ் எதுவும் வேண்டாம் நீங்கள் செய்த இந்த மிகப்பெரிய விஷயத்துக்கு அது என்னுடைய நன்றி கடனாக இருக்கட்டும் என கூறுகிறார்.

பின்னர் எல்லோரும் மருத்துவமனையில் நின்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாஸ்கரின் அம்மா ஓடி வருகிறார். பிறகு பார்வதிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிந்ததும் நாங்க ரொம்ப பதறிப் போய் விட்டோம்.

ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல என கேட்டு உங்கள பதற்றப் பட வைக்க வேண்டாம் என்றுதான் சொல்லவில்லை என சந்தியா சரவணன் கூறுகின்றனர். அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கின்றனர்.

பிறகு அதெல்லாம் பரவாயில்லை ஒற்றுமையாக இருந்து எவ்வளவு பெரிய விஷயம் செய்து இருக்கிறீர்கள் என பாராட்டுகிறார். பின்னர் பாஸ்கர் தன்னுடைய அம்மாவை பார்வதியை பார்ப்பதற்காக அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.