கோபி பிரச்சனைக்கு அம்மா சொன்ன தீர்வு.. ராதிகா எடுத்த முடிவு, அதிர்ச்சியில் பாக்கியா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.

இன்றைய எபிசோட்டில் பாக்கியா கோபி போனை எடுத்து பார்க்க, தூக்கத்தில் இருந்து கண் விழித்த கோபி அவரை திட்டி போனை வாங்குகிறார். கோபி திட்ட தொடங்கியதும் பாக்கியா அமைதியாக படுத்து கொள்கிறார்.

மறுநாள் காலையில் எழில் இயக்கிய திரைப்படம் ரிலீசாகிற காரணத்தில் அவர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என்ற பதற்றத்துடன் இருக்க அவருக்கு குடும்பத்தார் படம் கண்டிப்பா வெற்றி பெறும் என ஊக்கப்படுத்துகின்றனர்.

இந்த நேரத்தில் கோபி வந்து அமர்ந்து பேப்பர் படிக்க எல்லோரும் காலையிலேயே எழுந்து வந்து பரபரப்பா இருக்கோம். உனக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்லை என கூறுகிறார். ஏன் மா என்னாச்சு என கோபி கேட்க இன்னைக்கு எழில் படம் ரிலீசாகி இருக்கு என கூறுகிறார்.

பிறகு கோபி சாரிடா. மறந்துட்டேன் ஆல் தி பெஸ்ட், கண்டிப்பா இன்னைக்கு நான் தியேட்டர்ல போய் படத்தை பார்ப்பேன் என கூறுகிறார்.

அடம் பிடிச்சு உனக்கு பிடிச்ச விஷயத்தை நீ செய்து சாதிச்சுட்ட, எனக்கு தான் என் வாழ்க்கையில எனக்கு பிடிச்சது எதுவுமே கிடைக்கல, எதிர்த்து பேசவும் தைரியம் இல்லாத கோழையா வாழ்ந்துட்டேன் என கூறுகிறார்.

நீ உனக்கு பிடிச்ச விஷயத்தை செய்து வாழ்க்கையில் சந்தோஷமாக இரு, யாருக்காகவும் எதுக்காகவும் உன் ஆசைகளை விட்டு கொடுக்காத என கூறுகிறார்.

இந்த பக்கம் ராதிகா வீட்டுக்கு அவருடைய அம்மா திடீரென வந்து நிற்கிறார்.

பிறகு ராதிகா இது குறித்து கேட்க மயூ, நீ என ரெண்டு பேருமே சரியா பேசல, பிறகு குழந்தை கிட்ட ஏதாவது பிரச்சனையா என கேட்க நீ அவகிட்ட கூட சரியா பேசல, அடிச்சிட்டனு சொன்னா அதான் கிளம்பி வந்துட்டேன் என கூறுகிறார்.

பிறகு ராதிகா கோபி என்னை நல்லா ஏமாத்திட்டாரு, அவர் தான் டீச்சரோட புருஷன் என நடந்த விஷயங்களைக் கூறுகிறார்.

இது தான் பிரச்சினையா? கோபி நீ பிரிந்து போயிட கூடாதுனு தானே அப்படி பண்ணாரு, அவர் உன் கூட மயூ கூடவும் வாழ தானே அப்படி பண்ணி இருக்காரு, விவாகரத்து வாங்கிட்டு தானே வராரு, அப்புறம் என்ன என கேட்க ராதிகா என்னமா இப்படி எல்லாம் சொல்றீங்க, டீச்சர் எவ்வளவு நல்லவங்க தெரியுமா? அவங்க வாழ்க்கையை அழிச்சிட்டு என்னால எப்படி சந்தோஷமா வாழ முடியும்? அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை, இனி இதை பத்தி பேசாதீங்க என கூறுகிறார்.

இந்த பக்கம் பாக்கியா கோபி ரூமுக்கு சென்று எழில் கிட்ட எதுக்கு அப்படி சொன்னீங்க, அதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.