வேறொரு சீரியலில் நடிக்கும் பாக்கியலஷ்மி சீரியல் விஷால்?

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறலாம்.

இந்தத் தொடர் தற்போது மக்கள் எதிர்பார்த்தபடி பாக்யாவின் கணவனான கோபி அவர் செய்யும் திருட்டு தனங்கள் அனைத்தும் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்தப் பரபரப்பான நிலையில் இந்த தொடரில் இரண்டாவது மகனான எழில் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் அவர்கள் விஜய் தொலைக்காட்சியிலே மதிய நேரம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற நாடகத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.