கண்ணம்மாவிடம் நக்கலாக பேசிய பாரதி.. கடைசியில் ஹேமா கொடுத்த அதிர்ச்சி – பாரதிகண்ணம்மா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் ஸ்கூலில் ஹேமா லட்சுமியிடம் என்னுடைய அம்மா இறந்துட்டதா அப்பா சொன்னாரு ஆனா இப்போ யாருக்குக் விவகாரத்து கொடுக்கப் போகிறதா சொல்லிட்டு இருக்கறதை நான் கேட்டேன். செத்துப்போன உங்களுக்கு எப்படி டிவோஸ் கொடுக்க முடியும் என கேட்க எனக்கு எப்படி தெரியும் நீ இத டாக்டர் அப்பா கிட்ட கேளு, அவர் ஒருவரால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என கூறுகிறார் லட்சுமி.

இந்த பக்கம் ஷர்மிளா வெண்பாவிடம் இதுக்கு முன்னாடி வந்த இரண்டு மாப்பிள்ளையின் டம்மி பீசு. நீ என்ன பண்ணுறேனு கண்காணிப்பதற்காக வர வெச்ச ஆளுங்க. ரோகி சாரதி தான் உண்மையான மாப்பிள்ளை என கூறுகிறார். ரெண்டு பேருக்கும் பொருட்டும் சூப்பரா இருக்கு. ரெண்டு பேரும் நல்ல பிரண்டா அறிமுகமாகி இருக்கீங்க, அவரோட வெளியே போயிட்டு வா என கூற முன்ன பின்ன தெரியாத ஆள் கூட டேட்டிங் போக சொல்ற நீ என்னம்மா என வெண்பா கேட்க இந்த கிராமம் போடாத இன்னைக்கு ஓட ஜெனரேஷன் எங்கேயோ போயிடுச்சு என அனுப்பி வைக்கிறார்.

ரோகித் காரை மெதுவாக ஓட்டிச் செல்ல வெண்பா கடுப்பாகி வேகமாக போக சொல்கிறார். உடனே காரை தாறுமாறாக ஓட்டி பதற வைக்கிறார் ரோஹித். அதன்பிறகு பீச்சில் காரை இறக்கிவிட்டு வெண்பாவை அழைக்கிறார். ‌‌ பின்பா இவனை போய் எங்க அம்மா பார்த்து வச்சிருக்காங்க என புலம்புகிறார்.

இந்த பக்கம் பாரதி மருத்துவமனையில் கண்ணம்மாவை அழைத்து விவாகரத்து நோட்டீஸ் பற்றி கேட்க அவர் அதைப் பற்றி பதில் சொல்லாமல் மருத்துவமனை விஷயங்கள் என நினைத்து அதைப் பற்றி பேசுகிறார். பிறகு விவாகரத்து நோட்டீஸ் வந்தது தானே என கேட்க வந்தது பத்திரமா எடுத்து வச்சிருக்கேன் என கூறுகிறார். அதிலேயே தேதி நேரம் எல்லாம் குறிப்பிட்டிருக்கும் அந்த நேரத்திற்கு கரெக்டாக வந்து விடு. நம்ப ரெண்டு பேரும் நிரந்தரமாக பிரிய சட்ட ரீதியான முடிவு இது. நான் ரொம்ப சந்தோஷமா இருக்க போற நாள் என நக்கலாக கூறுகிறார். நீங்க சட்டத்தை நம்பர் எங்கே நான் உண்மையை நம்புறேன் உண்மையை சட்டமும் அங்கீகரிக்கும் என நம்புவதாக கூறுகிறார்.

அதன் பிறகு ஹேமா மருத்துவமனைக்கு வந்து காத்துக் கொண்டிருக்க அப்போது பாரதி உள்ளே வந்து ஹேமாவிடம் பேச அவர் அமைதியாகவே இருக்கிறார். பிறகு யாருக்குக் டிவோஸ் கொடுக்கப் போறீங்க எங்க அம்மா செத்துப் போயிட்டாங்க என்று ஒருமுறை சொன்னீங்க. அப்படி இருக்கும் போது இப்போ யாருக்குக் டிவோஸ் கொடுக்கப் போறீங்க எங்க அம்மா உயிரோடு தான் இருக்காங்களா எங்க இருக்காங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க என கேள்வி மேல் கேள்வி கேட்க பாரதி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.