தனுஷ் பட டைட்டிலில் ஜீ தமிழின் புது சீரியல்! லீக் ஆன புகைப்படங்கள் இதோ

ஹிட் ஆன திரைப்படங்களின் பெயர்களை அப்படியே சீரியல்களுக்கு வைப்பது தான் தமிழ் சின்னத்திரையில் லேட்டஸ்ட் ட்ரெண்ட். தற்போது விஜய் டிவியின் பல தொடர்களுக்கு இப்படி பெயர் வைத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஜீ தமிழில் தனுஷின் ஹிட் பட பெயரில் ஒரு புது சீரியல் வர போகிறது. ‘மாரி’ சீரியல் தான் அது.

அந்த புது சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. தெலுங்கு சீரியல் ஒன்றின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர் என சொல்லப்படுகிறது.