பார்வதி காணாமல் போன நிலையில் பாஸ்கர் பெற்றோர் கொடுத்த அதிர்ச்சி.. செய்வதறியாது தவிக்கும் சிவகாமி – ராஜா ராணி 2 ( 17.05.2022)

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் குடும்பத்தார் ஆளுக்கு ஒரு பக்கம் பார்வதியைத் தேடி எங்கும் கிடைக்காமல் வீட்டுக்கு வந்து குழம்புகின்றனர்.

சரவணன் பார்வதிக்கு உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என பாஸ்கரிடம் கேட்க அதெல்லாம் ஒன்றும் இல்லை என்னிடம் அப்பா அம்மாவிடம் என எல்லோரிடமும் நன்றாக தான் பேசி சிரித்துக் கொண்டிருந்தால் வரும்போதும் சந்தோஷமாகத்தான் வந்தாள்.

ஆனால் முதல் இரவன்று எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது என சொல்லி விட்டாள் நானும் தொந்தரவு செய்யவில்லை என கூறுகிறார். இதைக் கேட்ட அர்ச்சனா உடனே அப்படின்னா என்ன அர்த்தம் பார்வதிக்கு உங்க மேல ஆசை இல்லை அவனுடைய ஆசை வேறு ஏதோ ஒரு பக்கம் திரும்பி இருக்கலாம் அல்லது திரும்ப விக்கியிடம் சென்று இருக்கலாம் என கூறுகிறார். அர்ச்சனா பேசியதைக் கேட்ட அனைவரும் அவரை திட்டுகின்றனர்.

அதன்பிறகு சந்தியா இப்போதைக்கு போலீசில் புகார் அளிப்பது தான் நல்ல விஷயம் எனக் கண்ட சிவகாமி போலீஸ் எல்லாம் வேண்டாம் பேப்பரில் எல்லாம் போட்டோவை போடுவாங்க நாமலே தேடி கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார்.

பிறகு எல்லோரும் இப்போதைக்கு சந்தியா சொல்வதுதான் நல்ல முடிவு என சொல்ல சிவகாமியும் வேறு வழியில்லாமல் சரி என ஒப்புக் கொள்கிறார். போலீசுக்கு போகலாமென பேசியதும் செல்வம் அதிர்ச்சி அடைகிறார் அதெல்லாம் வேண்டாம் நாம் தேடிப் பார்க்கலாம் என சொல்ல சந்தியா போலீஸ்க்கு போவதில் உறுதியாக உள்ளார்.

பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று பார்வதி காணாமல் போன விஷயம் குறித்து புகார் அளிக்கின்றனர். போலீசும் உடனடியாக ஆக்சன் எடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சந்தியா சரவணன் வெளியே வந்ததும் பாஸ்கலின் பெற்றோர் போன் அடிக்கின்றனர். சரவணன் போன் எடுப்பதற்குள் கட் ஆகிவிடுகிறது.

இந்த பக்கம் பார்வதியின் அப்பாவிற்கு போன் வர அவர் நமது வீட்டிலிருந்து போன் பண்ணுகிறார்கள் என சொல்ல சிவகாமி எதையாவது பேசி சமாளியுங்கள் என கூறுகிறார். பிறகு போனை எடுத்ததும் பார்வதியும் பாஸ்கரும் என்ன பண்றாங்க ஒரு விருந்து பலமா என கேட்கின்றனர். இப்பதான் சாப்பிட்டு முடிச்சாங்க தூங்குறாங்க எனச் சொல்லி சமாளித்து விடுகிறார்.

பிறகு என்னுடைய மனைவி சம்மந்தி அம்மா கிட்ட பேசணும்னு சொல்றாங்க போட்டு கொடுங்க என சொல்ல சிவகாமி போனை வாங்கிய பாஸ்கரின் அம்மா பார்வதி ரொம்ப நல்ல பொண்ணு என்கிட்ட ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டா அதுமட்டுமில்லை ராசியான பொண்ணு அவர் வந்த நேரம் எங்களுடைய பூர்வீக சொத்து பிரச்சனை எல்லாம் தீர்ந்து எங்களிடம் முழுதாக வந்துவிட்டது என கூறுகிறார். இதைக் கேட்ட சிவகாமிக்கு கண்ணீர் வந்துவிடுகிறது.

பிறகு மீண்டும் சரவணன் அப்பா போன் பேச அவரிடம் பாஸ்கரின் அப்பா நாங்க இந்த சந்தோசமான விஷயத்தை கொண்டாட உங்க வீட்டுக்கு கிளம்பி வரலாம்னு இருக்கோம் என சொல்ல வேண்டாம் வேண்டாம் எங்க ஊர்ல சில சம்பிரதாயம் இருக்கு நீங்க நாளைக்கு பொறுமையாக வண்டி வாங்க என கூறி போனை வைத்து விடுகிறார். என்ன உடனே போனை கட் பண்ணிட்டா இருந்து இந்த பக்கம் பேசிக்கொள்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.