நடுராத்திரியில் போன் செய்த ராதிகா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் வசமாக சிக்கிய கோபி

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ், மற்றும் பாக்கியலட்சுமி. கடந்த 2 தினங்களாக மகா சங்கமம் என்ற பெயரில் இந்த சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது.

அதன்படி இன்றைய எபிசோடில் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு இடையே கோபி சிக்கி கொண்டிருக்க ராதிகா போன் செய்ய அவர் நைசாக எழுந்து சென்று படிக்கட்டில் நின்று பேசுகிறார்.

இங்க இருந்து பேசுவது சரியா இருக்காது மொட்டை மாடிக்குப் போய் பேசலாம் என மொட்டை மாடிக்குச் செல்ல அங்கு எழில், கதிர் ஜீவா ஆகியோர் படுத்து பேசிக்கொண்டிருக்க அவர்கள் மீது சென்று மோதி விடுகிறார் கோபி. இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியான கோபி போனை கட் செய்துவிட்டு மன்னிப்பு கேட்கிறார்.

என்ன மாமா இந்த நேரத்துல மேல வந்திருக்கீங்க என கேட்க இல்ல காத்து வாங்கலாம்னு வந்தேன் என சொல்கிறார். சரி நீங்க தூங்குங்க நான் கீழே போகிறேன் என சொல்ல காத்து வாங்கலாம்னு வந்துட்டு என்கிற போறீங்க உட்காருங்க மாமா பேசிட்டு போகலாம் என பிடித்து உட்கார வைக்கின்றனர்.

பிறகு ஜீவாவும் கதிரும் கோபியை கேள்வி மேல் கேள்வி கேட்டு தொலைக்கின்றனர். இன்னொரு பக்கம் ராதிகா விடாமல் போன் அடித்துக்கொண்டே இருக்கிறார். இதனால் கோபிக்கு வியர்த்துக் கொட்ட என்ன என கேட்க காத்து வாங்கலாம்னு தான் வந்தேன் ஆனால் ஏசி இல்லாததால் வியர்த்து கொட்டுது என சொல்கிறார்.

பிறகு கோபி ஒருவழியாக சமாளித்து கீழே இறங்கி வந்து படிக்கட்டில் அமர்ந்து வீட்டுக்கு வெளியே கோபிநாதன் பெரிய போடு இருக்கு ஆனா சொந்த வீட்டில சந்தோசமா நிம்மதியா பேசுவதற்கு ஒரு இடம் இல்லை என்ன வாழ்க்கைடா இது என புலம்புகிறார். இன்னும் இந்த கூட்டத்தை எத்தனை நாளைக்கு சமாளிக்கறதுனு தெரியல என சொல்கிறார்.

இந்த பக்கம் பாக்கியா, தனம், செல்வி மற்றும் முல்லை ஆகியோர் பேசிக் கொண்டு இருக்க தடுக்க அந்த நேரத்தில் மீனா போர்வையை போர்த்திக்கொண்டு கீழே வர செல்வி அதை பார்த்து பயப்படுகிறார். இனிய ஐஸ்வர்யா தொல்ல தாங்கல அதனால கீழே இறங்கி வந்து விட்டதாக சொல்லி இங்கே படுத்திக் கொள்கிறார் மீனா ‌. பிறகு முல்லையும் கதிரும் இரவு நேரத்தில் வெளியே சென்று சாப்பிட்டு வரும் கதையை கூறுகிறார்.

மறுநாள் காலையில் கதிர் முள்ளை எழில் மற்றும் மீனா ஆகியோர் வாக்கிங் சென்றிருக்க கதிரும் முல்லையும் பேசிக்கொண்டே முன்னாடி சென்று விடுகின்றனர். பிறகு மீனா எழிலிடம் நீங்கள் காதலிக்கிறீர்களா என கேட்க எழில் சிரிக்கிறார். ஆமாம் என சொல்ல மீனா யார் எனக்கேட்க என்னுடைய சினிமாவைத்தான் என சொல்கிறார்.

அதன் பிறகு வீட்டில் கோபி தூங்கி எந்திரிக்க பக்கத்து வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து இப்பயாவது நிம்மதியா விட்டீர்களே என பேசுகிறார். பிறகு பாத்ரூமிற்கு சென்று கதவை திறக்க கதவு லாக் ஆகி உள்ளது. மூர்த்தி உள்ளே இருந்து குரல் கொடுக்கிறார். கோபி அவசரத்தில் வெளியே தவிக்கிறார். ஒரு வழியாக வெளியே வந்த மூர்த்தி கோபி உள்ளே செல்லவிடாமல் பேசி கொண்டிருக்க அதன் பிறகு பாத்ரூம் உள்ளே செல்ல முயற்சி செய்யும்போது கண்ணன் ஓடிவந்து கோபியை பிடித்து பெட்டில் தள்ளி விட்டு பாத்ரூமிற்குள் ஓடி விடுகிறார். இதனால் கோபி அவசரம் தாங்க முடியாமல் தவிக்கிறார்.

இந்த பக்கம் ஜீவாவும் ஐஸ்வர்யாவும் பாக்யாவின் மாமனாரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தியும் வந்து அவர்களிடம் சேர்ந்து கொள்கிறார். தன்னுடைய கணவர் மகிழ்ச்சியாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார். பிறகு பாக்கியா வெளியே செல்வதாக சொல்ல தனமும் கூட வருவதாக கூறுகிறார்.

கோபி எழுந்து கீழே வந்து உட்கார அப்போது அவருக்கு தனம் காபி எடுத்து வந்து கொடுக்கிறார். பிறகு பாக்கியா வர அவர் கோபியிடம் பேசிக்கொண்டிருக்க கண்ணன் ஓடிவர கண்ணனைப் பார்த்து பார்த்து பதகிறார் கோபி. ‌‌ பிறகு கண்ணன் அண்ணியை பார்க்க சென்றதும் ஒரு நிமிஷம் கூட தூங்க விடலை கையை தூக்கி பார்த்தேன் காலை தூக்கி போடலாம் முத்தம் கொடுக்குறான். முடியல என கோபி புலம்ப பாக்கியா இதையெல்லாம் கேட்டு சிரிக்கிறார். கோபி கடுப்பாகிறார்.

பிறகு கோபி வாக்கிங் கேட்க கிளம்ப அப்போது மூர்த்தி வர எங்கே என கேட்க வாக்கிங் போவதாக பாக்கியா சொல்ல நானும் வரேன் என்று கூடவே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியாவும் தனமும் சேர்ந்து ராதிகா வீட்டிற்குச் சென்று மயூ மற்றும் உங்களை கட்டிக்க போறவரோடு சேர்ந்து மாமாவோட பிறந்தநாள் பங்ஷனுக்கு வரணும் என அழைக்கிறார்.