முதலிரவில் பார்வதி எடுத்த முடிவு ; அர்ச்சனாவுக்கு செக் வைத்த விக்கி அப்பா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் பார்வதியை அவருடைய மாமியார் அலங்காரம் செய்து இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமாக இருக்கனும் அது உன்னுடைய நடத்தையில் தான் இருக்கு என சொல்கிறார்.

திருமண மண்டபத்தில் மாமியார் செய்த வேலைக்கு நன்றி கூறுகிறார் பார்வதி. அதையெல்லாம் அப்படியே மறந்ததே இனிமே பாஸ்கரோட சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி கையில் பாலைக் கொடுத்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கிறார்.

கையில் பாலுடன் பார்வதி உள்ள போன்றது அவரை வரவேற்ற பாஸ்கர் அமரவைத்து இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். இதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன் என நெருங்கிச் செல்ல பார்வதி கொஞ்சம் விலகிச் செல்கிறார். பார்வதி அம்மா செய்த உதவி சந்தியா செய்த விஷயங்களைப் பற்றி பேசுகிறார்.

இவங்க எல்லோரும் நமக்கு முக்கியம் தான் ஆனால் இதெல்லாம் நாளைக்கு காலையில பேசிக்கலாம் என பாஸ்கர் சொல்லிவிட்டு மீண்டும் நெருங்க உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும் என கூறுகிறார் பார்வதி.

பாஸ்கரும் என்ன விஷயம் சொல்லு என கேட்க விக்கி கொடுத்த டார்ச்சரால் ஒரு வாரமா நான் தூங்கவே இல்லை, எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தூங்கிக்கவா என கேட்கிறார்.

பாஸ்கர் அமைதியாக இருக்க பார்வதி அவருடைய முகத்தில் கை வைத்து ப்ளீஸ் என கெஞ்சி கேட்க உன்னுடைய விருப்பம் இல்லாம நான் எதுவும் செய்ய மாட்டேன் நீ தூங்கு நம்ப வாழ்க்கையில இன்னும் நிறைய நாள் மிச்சம் இருக்கு என கூறுகிறார். பிறகு பார்வதி படுத்து தூங்குகிறார்.

இந்த பக்கம் கருணாகரன் விக்கியை ஜெயிலில் போட்டதைப் பற்றி கடும் கோபத்தில் இருக்கிறார். இதற்கெல்லாம் யார் காரணம் என கேட்க விக்கி உடன் இருந்த ஒருவர் அர்ச்சனா தான் காரணம். பாஸ்கருக்கு அவளுடைய தங்கச்சியை கட்டிவைத்த வேண்டும் என்பதால் விக்கியை நல்லா யூஸ் பண்ணிக்கிட்டா.

எவ்வளவு சொல்லியும் விக்கி கொஞ்சம் கூட ஏற்கவே இல்லை. அடிக்கடி போன் பண்ணி பார்வதி இதை பண்ற அதை பண்றா என சொல்லிக்கிட்டே இருந்தா என சொல்ல கருணாகரன் இதுக்கு எல்லாத்துக்கும் காரணமான அர்ச்சனாவை நான் சும்மா விடமாட்டேன் என கூறுகிறார்.

பிறகு மறுநாள் அர்ச்சனா கடையில் இருக்க அப்போது ஒருவர் வந்து கடையில் முதலாளி இல்லையா என கேட்க ஏன் என்ன பார்த்தா முதலாளி மாதிரி தெரியலையே, என்ன வேணும் சொல்லுங்க என கேட்க கல்யாணத்துக்கு தேவையான பட்டு வேஷ்டி சட்டை, பட்டுப் புடவை எல்லாம் இருக்கா? வீட்டுக்கு எடுத்துட்டு வந்து காட்ட முடியுமா எனக் கேட்க அதெல்லாம் காட்ட முடியாது இங்கேயே வந்து எடுத்துக்கொள் என சொல்கிறார்.

இல்ல எங்க வீட்டு பொம்பளைங்க வெளியே வர மாட்டாங்க ஐயா கார்ல காத்துகிட்டு இருக்காரு. நாங்க ஒரு புடவை 2 புடவை எடுக்கப் போறதில்லை சாம்பிளுக்கு 4 புடவை எடுத்துட்டு வந்து காட்டினா போதும். இரண்டு லட்ச ரூபாய்க்கு துணி எடுத்துக் கொள்வோம் என சொல்கிறார்.

இதை கேட்ட அர்ச்சனாவும் வாயைப் பிளந்து எடுத்துட்டு வந்து காட்டுறோம் ஆனால் இப்போதைக்கு என்னுடைய கணவர் இல்லை. கல்லாவில் நான் தான் இருக்கிறேன். ஆகையால் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் முகவரியை மட்டும் கொடுத்துட்டு போங்க என சொல்ல அந்த நபரும் அட்ரஸை கொடுத்துவிட்டு செல்கிறார்.

இந்த பக்கம் சந்தியா பார்வதி கல்யாணத்தில் சரவணன் உடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க அப்போது சரவணன் அங்கு வந்து அவன் படிக்கலையா என கேட்கிறார்.

எல்லாம் போன்ல வந்து விட்டது நான் நேரத்தை வீணடிக்காமல் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என சொல்கிறார். இந்த போன்ல எல்லாமே இருக்கு என சந்தியா சொல்ல பார்வதி இப்படி பிரச்சனையில் சிக்கவும் இந்த போன் தான் காரணம் என கூறுகிறார்.

அந்த விக்கி அப்ப என்ன பண்ண போறாருன்னு பயமாக இருக்கிறது என கூறுகிறார். இப்போதைக்கு விக்கியை நிச்சயமாக வெளியே கொண்டுவர முடியாது. அந்த கருணாகரன் பலாலு புடுங்கின பாம்பு மாதிரி, அதுவுமில்லாம பார்வதி இப்போ தைரியமா இருக்கா ஆதரவா பாஸ்கர் அவருடைய அம்மா இருக்காங்க என சொல்கிறார்.

சந்தியா சொன்னதைக் கேட்டு நம்பிக்கையோடு சரவணன் அங்கிருந்து அவருடைய வேலைகளை கவனிக்க கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.