கண்ணம்மா போடும் திட்டம், அதிர்ச்சியில் வெண்பா

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சௌந்தர்யா ஹேமாவோட அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு போன்கால் வருகிறது.

பாரதியைப் பற்றி டிவி செய்தியில் முக்கியமான விஷயம் ஓடுவதாக சொல்ல சௌந்தர்யா டிவியை ஆன் செய்ய சொல்கிறார். இந்தப் பக்கம் குமார் அண்ணா லட்சுமியை டிவி போட சொல்கிறார். செய்தியில் பாரதி சக்தி என்ற குழந்தைக்கு மாற்று இதயம் குறித்த பகுதியில் அதற்காக அவர்கள் எடுக்கும் முயற்சியையும் பற்றி கூறுகின்றனர்.

பிறகு ஹேமா, லட்சுமி என இருவரும் இது பற்றி கேட்க சௌந்தர்யா ஹேமாவுக்கும் குமார் அண்ணா லட்சுமிக்கு எடுத்துக் கூறுகிறார். லட்சுமி ஹேமா என இருவரும் பாரதியை புகழ்ந்து பேசுகின்றனர். மருத்துவமனையில் கணேஷ் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு இதயத்தை எப்படி கொண்டு வருவது என நான் போட்டு அதை தன்னுடைய குழுவினரிடம் கூறுகிறார்.

அதாவது விழுப்புரத்திலிருந்து விக்கிரவாண்டி வரைக்கும் ஆம்புலன்சில் எடுத்து வந்து விட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வந்துவிடலாம் என கூறுகிறார். பிறகு இது குறித்து பாரதி உட்பட அனைவரும் விக்ரமிடம் கலந்து வசிக்க விக்ரமும் எனக்கு நல்ல ஐடியாவாக தான் தெரிகிறது என கூறுகிறார்.

ஆனால் கண்ணம்மா கடந்த மூன்று தினங்களாக அந்த பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது ஆகையால் நாளில் மழை பெய்தால் ஹெலிகாப்டரில் இதயத்தை கொண்டு வருவது என்பது சிக்கலாக்கிவிடும். ரோடு வழியாக கொண்டு வருவதுதான் சரியாக இருக்கும் என கூறுகிறார்.

இதைக் கேட்ட பாரதி பேச வேண்டும் என்பதற்காக எதையாவது பேசாதீங்க. ரோடு வழியாக ஒன்றரை மணி நேரத்தில் கொண்டு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என சொல்கிறார். தனியாளா முயற்சி செய்தால்தான் முடியாது அரசாங்கத்திடம் உதவி கேட்கலாம் என கூறுகிறார்.

ஆனால் பாரதி அதை காதில் வாங்காமல் அங்கிள் எனக்கு கணேஷ் சொன்ன திட்டம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் அதை செயல் படுத்தி விடலாம் என சொல்ல விக்ரம் சரி என கூறுகிறார்.

அதன் பிறகு விக்ரம் தன் அம்மாவிடம் பேச எப்படி கொண்டு வரும் என்பது முக்கியம் இல்லை ஆனால் போட்ட திட்டம் சரியாக நடக்க வேண்டும் ஒருவேளை மழை பெய்தால் என்ன செய்வது என கண்ணம்மா சொல்ல மழை வராது என்று வேண்டிக் கொள்வோம் என கூறிவிட்டு செல்கிறார் விக்ரம்.

இந்த பக்கம் சாந்தி வெண்பா விடம் அம்மா என்னிடம் பாரதி வீட்டு முகவரி கேட்டாங்க என சொல்ல நீ சொல்லிட்டியா சொல்லல தானே என வெண்பா கேட்கிறார். முதலில் எனக்கு தெரியாது என்றுதான் சொன்னேன் ஆனால் அம்மா மிரட்டி கேட்டதால் சொல்லி விட்டேன் என கூறுகிறார்.

பிறகு ஷர்மிலா வீட்டுக்கு வர அவரிடம் வெண்பா எங்க போயிருந்தீங்க என கேட்க பாரதி வீட்டுக்கு கல்யாண விஷயமாக பேச போயிருந்தேன் எனக்கூற வெண்பா மகிழ்ச்சி அடைகிறார். யாரைப் பார்த்து பேசுங்க எனக் கேட்க சௌந்தர்யாவை பார்த்துப் பேசினேன் அவங்க ரொம்ப ஸ்வீட் என்னுடைய முழு சப்போர்ட்டும் இருக்கும் என சொன்னாங்க என சொல்ல வெண்பா எப்ப கல்யாணம் வெச்சுக்கலாம்னு சொன்னாங்க என கேட்கிறார்.

நீயா கற்பனை பண்ணிடாத ஒரு நிமிஷம் இரு, நான் கல்யாணம் விஷயம் பேச போனேன்னு தான் சொன்னேன். உனக்கும் பாரதிக்கும் கல்யாண விஷயம் பேச போனேன்னு சொல்லல. ‌ சௌந்தர்யாவுக்கு சென்னையில நிறைய பேரு தெரிஞ்சு இருக்கும், அதனால உனக்கு ஏத்த மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்ல சொன்னேன். அவங்களும் வெண்பா எனக்கு பொண்ணு மாதிரி நானே கல்யாணத்தை முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன் என சொன்னாங்க என்று கூறுகிறார்.

அவங்க இப்படித் தான் சொல்லுவாங்க என வெண்பா சொல்ல வந்த கொஞ்ச நாள்லயே பாரதிக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசையில்லை என்று தெரிஞ்சிடுச்சு சௌந்தர்யாவும் உன்னை மருமகளாய் ஏத்துக்க விரும்பல அப்படி இருக்கும்போது பத்து வருஷமா நீ எப்படி காத்துகிட்டு இருந்த என கேட்கிறார்.

பிறகு ஷர்மிலா உள்ளே எழுத்துச் செல்ல வெண்பா எல்லோரும் சேர்ந்து கல்யாண விஷயத்துல ஆட்டம் போடுரீங்களா என்ன பண்றீங்கன்னு பார்த்துக்கிறேன் என சொல்ல இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோடு முடிவடைகிறது.