‘குக்கு வித் கோமாளி -3′- இல் ‘பிக் பாஸ்’ தாமரை?

விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஷோ குக் வித் கோமாளி. சமையல் தெரிந்தவர்களுடன், அடுப்பங்கரை என்றால் என்னவென்றே தெரியாத கோமாளிகள் செய்யும் அட்டகாசம் எக்கச்சக்கம்.

விரைவில் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்ட நாட்டுப்புற கலைஞர் தாமரை குக்குகளில் ஒருவராக கலந்து கொள்ளவிருக்கிறார் என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே தனது சமையல் திறமையால் போட்டியாளர்களின் மனதை வென்றவர் தாமரை. குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாட்டுப்புற இசைக் கலைஞர் அந்தோணி தாசன், நடிகர் கருணாஸின் மனைவி கிரேஸ்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட மனோ பாலா. நகைச்சுவை நடிகை வித்யூ லேகா ஆகியோர் குக்குகளாக களம் இறங்க காத்திருக்கின்றனராம்.

ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா ஆகியோர் கோமாளிகளாகத் தோன்றும் புரோமோ ஏற்கெனவே வெளியாகி விட்ட நிலையில் கலக்கப்போவது யார் புகழ் குரேஷி, சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் ஆகியோரும் கோமாளிகளாக பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.