கண்ணம்மா வைத்த செக், சோகத்தின் உச்சத்தில் வெண்பா- இப்படி ஆகிடுச்சே, பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்த அதிரடி

பாரதி கண்ணம்மா ஒரு அழகான காதல் கதையை கொண்ட தொடராக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கதையில் மாற்றம் ஏற்பட ஆரம்பத்தில் இருந்த காதல் கதை எப்போது வரும் என ரசிகர்கள் புலம்பும் அளவிற்கு கதையில் பல மாற்றங்கள்.

இந்த மாற்றத்திற்கு காரணம் வெண்பா என்ற கதாபாத்திரம் தான். கதையில் வெண்பாவிற்கு கண்ணம்மா செக் வைக்க இப்போது பெரிய பிரச்சனையில் இருக்கிறார்.

ஜெயிலுக்கு போன வெண்பா வெளியே வந்து மருத்துவ சிகிச்சை செய்ய முடியாமல் பிரச்சனையில் மாட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வெண்பா கொஞ்சம் மன அழுத்தத்திற்கு சென்று தனது வீட்டில் யாரும் இல்லாத அறையில் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்வது போல் புலம்பி லருகிறார்.

அந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் காட்டப்படுகிறது.