சர்வைவர் டைட்டில் வின்னரானர் விஜயலட்சுமி

0

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டிலினை விஜயலட்சுமி வென்றுள்ளார்.

அவருக்கு வெற்றிப்பரிசாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. சர்வைவர் நிகழ்ச்சி 2000 ஆம் ஆண்டு அமெரிக்கா தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இதுவரை கிட்டத்தட்ட 40 இற்கும் மேற்பட்ட சீசன்களை கடந்திருக்கிறது இந்த சர்வைவர் போட்டி நிகழ்ச்சி.

தமிழில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த ரியாலிட்டி ஷோவை ஆக்ஷன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பலவிதமான சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்களை களமிறக்கி காடர்கள்,வேடர்கள் என இரு குழுக்களாக பிரித்தனர்.

8 ஆவது வாரத்தின் போது அனைத்து போட்டியாளர்களும் ஒன்றினைந்து கொம்பர்களாகினர். அடர்ந்த காட்டுக்குள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதே இதில் காணப்பட்ட போட்டியாகும். இதில், தனக்கு தேவையான உணவு, தண்ணீர், நெருப்பு என அடிப்படையான தேவைகளையும் அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் கலந்துக்கொண்ட போட்டியாளர்களுக்குள் தங்களுக்குள்ளே ‘சர்வைவர்’ யார் என தேர்ந்தெடுத்து, நீக்க ஓட்டுகள் வழங்க அனுமதியளிக்கப்படும். மேலும் இந்த போட்டியில் கொடுக்கப்படும் கடினமான சவால்களை சமாளித்து இறுதியில் மிஞ்சுபவரே நிகழ்ச்சியின் சர்வைவர் பட்டத்தினை சூடுவார்.

100 நாட்கள் நடந்து முடிந்த இந்த போட்டியில், டாப் 5 லிஸ்டில் விஜயலட்சமி, வானேசா, சரண்,உமாபதி மற்றும் நாராயணன் ஆகியோர் இடம் பிடித்தனர்.

இதில் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு நடந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் பைனலிஸ்டில் இடம் பிடித்தார் விஜி. அவருக்கு கிடைத்த சலுகையை பயன்படுத்தி வானேசாவை 2 ஆவது போட்டியாளராக தன் உடன் அழைத்துச்சென்றார். 3 ஆவது பைனலிஸ்ட்டிற்காக நடைப்பெற்ற போட்டியில் சரண் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிவரை இறுதிப்போட்டியில் விஜலட்சுமி, சரண் மற்றும் வானேசா ஆகியோர் இருந்தனர். மற்றைய போட்டியாளர்களான விக்ராந்த், இனிகோ, நந்தா, அம்ஜித், உமாபதி, ஐஸ்வர்யா மற்றும் நாராயணன் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் வாக்கு போட்டு சர்வைவர் டைட்டில் வின்னரை தேர்வு செய்ய வேண்டும்.

இதில் அதிக வாக்குகளைப் பெற்ற சிங்கப்பெண்ணாக விஜயலட்சுமி சர்வைவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியில் வென்ற அவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. தன்னத்தனி தீவில் 90 நாட்கள் பெரும் சவாலான டாஸ்குகனை செய்து அசத்திய விஜயலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.