தூணை பிடித்துக்கொண்டு கதறி அழுத்த ராஜு

0

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த முறை விஜய் டிவி பிக்பாஸ் தெனிப்பொருளாக உள்ள எதிர்பார்த்ததை எதிர்பாருங்கள் என கமல் எப்போதும் சொல்வது இன்று நிஜமாகி விட்டது.

எவ்வாறு அபினை காப்பாற்றப்பட்டார் ? இமான் அண்ணாச்சி வெளியே போகவேண்டியவரே அல்ல என்று தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகிறார்கள்.

இன்றைய நாள் எபிசோடில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக காப்பாற்றி வந்தார் உலகநாயகன் கமல். தாமரை,அக்ஷரா மற்றும் அபினை ஆகியோரை வரிசையாக காப்பாற்றினார். அதன் பிறகு எலிமினேஷன் யார் என்பதை பற்றி கார்டை எடுத்து மக்களுக்கு காட்டினார்.

அதில் இமான் தான் எலிமினேஷன் எனயறிந்து அனைவரும் ஷாக்கானார்கள்.அதன் பிறகு அனைவரிடமும் விடை பெற்று இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு கிளம்ப தயாரானார். அந்த நிமிடத்தில் ராஜுவிடம் பேசிய இமான் அண்ணாச்சி “உன்னை விட்டு முப்பது நாள் எப்படி இருக்க போகிறேனோ” என கூறினார்.

அதை கேட்டு ராஜூ அருகில் இருந்த தூணை பிடித்து அழ ஆரம்பித்துவிட்டார். அவரை மற்றவர்கள் ஆறுதல் படுத்தினார்கள். ராஜு கண்ணீர் விட்டது எமோஷ்னலாக்கி விட்டது என சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.