தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைத்த கமல்

0

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிட்டதட்ட அனைத்து நாட்களிலும் தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும், டாஸ்க்கின் போது மட்டுமின்றி சாதாரண நேரத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதன் காட்சியை நாங்கள் தொலைகாட்சியில் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய கமல் நிகழ்ச்சியின் பிரியங்கா மற்றும் தாமரை குறித்து விவாதிக்கப்படும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வெளியான இரண்டாவது புரமோவில் கமல் தாமரையை பேசவிடாமல் திக்குமுக்காட வைக்கும் வகையில் நாடகம் குறித்தும் அவர் பிரியங்காவிடம் நடந்து கொண்ட விதம் குறித்தும் மூச்சுவிடாமல் பேசி வருகின்றதை போன்ற காட்சியுடன் வெளியாகியுள்ளது.

இதில் தாமரை முகத்தில் அதிர்ச்சி தென்படுகிறது. தாமரை முகத்தில் அதிர்ச்சி தெரியத் தெரிய பிரியங்காவின் முகத்தில் குஷி அதிகமாகிக் கொண்டே வரும் காட்சிகளும் இன்றைய புரொமோவில் உள்ளமை காணக்கிடைத்தது. மொத்தத்தில் இன்று தாமரை தாக்கப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால் இன்றைய முழு நிகழ்ச்சியையும் பார்த்தால் தான் தாமரை மட்டுமின்றி பிரியங்காவும் தாக்கப்படுவாரா? என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.