தேர்தல் நாளில் விதிமீறிய விஜய்

Published:

தேர்தல் நாளில் விதிமுறைகளை மீறியதாக நடிகர் விஜய் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் கடந்த சில நாட்களாக ’கோட்’ படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த நிலையில் அவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காகவே சென்னை வந்தார். ஆனால் அவர் துபாயில் கனமழையில் சிக்கிக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில் காலதாமதமாக வந்தாலும் அவர் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இந்த நிலையில் விஜய் ஓட்டு போடுவதை படம் பிடிக்கவும் வீடியோ எடுக்கவும் பத்திரிகையாளர்கள், கேமிராமேன்கள் குவிந்ததால் நீலாங்கரை வாக்கு சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜய் மீது சமூக ஆர்வலர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரில் ’தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு சாவடிக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் 200க்கும் அதிகமானவர்களுடன் வந்ததால் அவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தேர்தல் நாளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அந்த மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மனு மீது  காவல்துறையினர் விரைவில் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்படும் நிலையில் இந்த மனுவில் உண்மை தன்மை இருந்தால் விஜய் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img