மாயமோகினி பாடல் விரைவில்

இலங்கை நாட்டினை சேர்ந்த கேவிஆர் (KVR) என்ற சொல்லிசை கலைஞன் தனது முதலாவது பாடலாக மாயமோகினி என்ற பாடலினை விரைவில் வெளியிடவுள்ளார்.

குறித்த பாடலின் முதற்பார்வை போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானதோடு, அந்த பாடல் வானொலியின் ஒளிபரப்பப்பட்டதன் பின்னர் மக்கள் மத்தியில் குறித்த பாடலுக்கான ஆவல் இன்னும் அதிகரித்திருந்தமை காணக்கிடைத்தது.

அந்நிலையில் தற்போது குறித்த பாடலின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பாடலின் இசையினை யஜீவன் வழங்கியுள்ளதோடு, பாடலினை லாரிட்ஸ் பாடியுள்ளார். மேலும் இதில் அமைந்துள்ள சொல்லிசையினை கேவிஆர் (KVR) பாடியுள்ளதோடு, இதற்கான இசைக்கலவையினை பிரேம் ராஜ் செய்துள்ளார்.

பாடலுக்கான வரியினை யஷோதன் எழுதியுள்ளதோடு, பாடலின் காணொளி மற்றும் வடிவமைப்பினை கஜன் கலையமுதன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடல் வெற்றி பெற மாயமோகினி பாடல் குழுவிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.