லவ்வாயணம் ஆல்பம் டீசர் வெளியானது

இலங்கை நாட்டினை சேர்ந்த இசையமைப்பாளர் மற்றும் பாடகரான பிரேம் ராஜ் அவர்களின் லவ்வாயணம் ஆல்பத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர்,பாடகர், இசை கலவை என்று இசைத்துறையில் பல்வேறு கோணத்திலும் பணியாற்றி வந்த பிரேம் ராஜ் தற்போது தனது முதலாவது இசை ஆல்பத்தினை வெளியிட உள்ளார்.

மண்மதன் லீலை கொண்டவன் ஹீரோ என்று வெளியிட்டுள்ள டீசரின் ஆரம்பிக்கும் இந்த வரிகளுடன் இது முற்றும் முழுதாக காதல் பாடல்களை கொண்ட இசை ஆல்பமாக வெளியாகவுள்ளது.

குறித்த இசை ஆல்பம் இவ்வருடத்திற்கு வெளியிட உத்தேசித்துள்ளதாக பிரேம் ராஜ் தெரிவித்தார்.

லவ்வாயணம் – மண்மதன்களில் மனதில் புதைந்த காதல் காவியத்தின் முதல் பாகமாக அமையும் என்பது இந்த டீசர் மூலமே தெரியவந்துள்ளது.

பிரேம் ராஜ் மற்றும் அவரின் இந்த இசை ஆல்பத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கு எமது சினிமா டு டே (cinema2day) இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள்.