இலண்டன் பெண் பாடிய தமிழ் பாடல்

இலங்கை தமிழ் சொல்லிசை கலைஞரான சி வி லக்ஸ் இன் இசையில் இலண்டனில் இருந்து இலங்கைக்கு சுற்றூலா வந்திருந்த கெய்ட்ளின் பாடி வெளிவந்திருக்கும் புதிய பாடல் ” வெள்ளைக்காரி ” ஆகும்.

குறித்த பாடலில் சி வி லக்ஸ் , ஸ்ரீ நிரோ மற்றும் கெய்ட்ளின் ஆகியோர் பாடியுள்ளனர்.

மேலும் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார பிரச்சினையின் நிமிர்த்தமாக இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ள நிலையில் அவர்களை கவரும் வண்ணம் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் ஒளிபதிவு மற்றும் வடிவமைப்பினை தர்ஷன் ஜெனா செய்துள்ளதோடு, பாடலின் இசைக்கலவையினை தினேஷ் நா செய்துள்ளார்.