Lank Wood இன் புதிய நடன பள்ளி மாத்தளையில் ஆரம்பம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் கலை பற்றிய கனவு வளர்ந்து கொண்டே செல்கிறது இந்த வேகமான நவீன உலகில் தன் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி தனக்கான அடையாளத்தை நிலைநிறுத்துகின்றனர். அவர்களின் வளர்ச்சியில் சில பொது நலனுடன் செயற்படும் ஊடகங்களும் பின் நிற்கின்றன.

அவ்வாறு ஒவ்வொரு கலைஞனதும் திறமைகளுக்கு களம் அமைத்து கொடுத்து சிறந்த ஜாம்பவான்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் யசோதன் (எழில்) என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்டதே Lank Wood அமைப்பு கடந்த வருடம் மே மாதம் 6 ஆம் திகதி முனைப்போடும் திறமையோடும் செயற்படக்கூடிய கலைஞர்களை இணங்கண்டு ஆரம்பிக்கப்பட்டது.

தன் அமைப்பிற்கான தனி பாதையை வகுத்து கொண்டு அவர்கள் பயணிக்க தொடங்கினர் இந்த அமைப்பு பற்றி எழிலிடம் கேட்டறிந்த போது, அவர் கூறிய கருத்துக்கள், சிறந்த கலைஞர்கள் இலங்கையை அழகரிப்பர் என்ற நம்பிக்கையை எமக்கு தந்தது. தென்னிந்திய சினிமாவை நம்பி இயங்கும் எம் இலங்கை தமிழ் மக்களுக்கு நம் நாட்டிலேயே ஒரு சினிமா சார்ந்த அமைப்பினை உருவாக்கி அவர்களின் அடையாளத்தை நிரூபிக்க, நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த அமைப்பு உதித்தது என்றார். மேலும் அவர் கூறுகையில் நம் நாட்டில் பல திறன் மிக்கவர் இருந்தாலும் அவர்களுக்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றன அவர்களுக்கு அமைப்பு பக்கபலமாக செயல்படுவதோடு. கலைத்துறை சார்ந்து கற்பதற்கும் நாம் வித்திட உள்ளோம்.

அதன் முதற்கட்டமாக Lank wood நடன பள்ளியை கடந்த மாதம் 20 ஆம் திகதி ( 20/02/2022 ) ஆரம்பித்தோம். இசையமைப்பாளர் யஜீவன் அவர்களோடு கணபதி மற்றும் செல்வி ஆகியோரினால் இந்த நடனப் பள்ளி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் சுபீட்சம் அமைப்பின் தலைவர் யோகேந்திரன் மற்றும் சுதர்ஷன், ரமேஷ், முருகானந்தன், மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தலைவர் சர்வானந்தம் , சிவஜானம், இசையமைப்பாளர் பிரேம்ராஜ், மலையகம். lk ஊடகத்தின் தலைவர் தனபாலசிங்கம் கலந்து கோலாகலமாக சிறப்பித்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் கலைத்துறையில் சாதிக்கும் பலரும் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான விருதும் வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும் இளம் பாடகருக்கான விருது k.பிரகாஷ் மற்றும் A.கிருஷ்ணகுமாரி சிறந்த சொல்லிசை பாடகிக்கான விருது R.ருத்ரா கபி,சிறந்த குரல் கலைஞருக்கான விருது S.சர்மிளா, மக்களிலிருந்து தெரிவு செய்யபட்ட பாடகி v.விஷாந்தி, சிறந்த அறிவிப்பாளருக்கான விருது s.ஸ்ரீதரன், சிறந்த நடிகருக்கான விருது S.ரொனி, சிறந்த நடிகைக்கான விருது M.சுவாதி, சிறந்த பாடலாசிரியருக்கான விருது E.கமலேஷ்வரன், சிறந்த வளர்ந்து வரும் இசை இயக்குனருக்கான விருது ஷஜய் ARS, திறமையான நடிகைக்கான விருது M. சங்கீதா, சிறந்த அறிமுக நடிகருக்கான விருது A.ஹரிஷ் என விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.

அதுமட்டுமின்றி வருடந்தோறும் சிறந்த கலை செயற்பாட்டாளர்கள் இனங்கண்டு அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்றும் இதன் போது நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார். தழைக்கட்டும் சிறக்கட்டும் இவர்களது வெற்றிப்பயணம்.