MC RA வின் என்னடா நடக்குது நாட்டில பாடல்

இலங்கை சொல்லிசை கலைஞனான MC RA வின் புதிய பாடல் ஒன்று கடந்த மாதம் 23 ஆம் திகதி வெளியானது.

இலங்கையில் நிலவுகின்ற சமூக பிரச்சினைகளுக்கு எதிராக கேள்வி கேட்கும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளமை விஷேட அம்சமாகும்.

பாடலுக்கான வரிகள் மற்றும் சொல்லிசையினை MC RA செய்துள்ளதோடு, குறித்த பாடலின் இயக்கத்தினையும் அவரே செய்துள்ளார்.

குறித்த பாடலுக்கு இசையினை ரமித் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இசைத்துறையில் கால் பதித்துள்ள MC RA விற்கு எமது வாழ்த்துக்கள்.