விதுஷானின் SORRY AMMA பாடல் வெளியானது

இலங்கை இசைக்கலைஞரான விதுஷானின் புதிய பாடலான SORRY AMMA வெளியாகியுள்ளது.

தாயின் சொல்லினை மீறி நண்பர்களுடன் சண்டை சச்சரவில் ஈடுபட்டு கடைசியில் நண்பரின் துரோகத்தினால் உயிரினை இழக்கும் ஒருவரின் வாழ்க்கையினை பாடல் காட்சிகளாக கொண்டு இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மரணிக்கும் போது தனது தாயிடம் மன்னிப்பு கேட்டு விதமாக இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலுக்கான இசையினை Darryl Duke வழங்கியுள்ள நிலையில், பாடலின் வரிகள் மற்றும் பாடலின் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை விதுஷான் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடலின் Dop – அச்சுதன் அழகுதுரையும் , பாடல் காணொளி வடிவமைப்புக்களை கணேசலிங்கம் புஷ்பகாந்த் மற்றும் பாடலின் இசைக்கலவையினை தினேஷ் நா செய்துள்ளனர்.