தனிமையில் என் நிலா பாடல் வெளியானது

0

தனிமையில் என் நிலா பாடல் இலங்கை கலைஞர்களினால் நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

ரேகன் ஜூலியன் இசையமைப்பில் அருண் யோகதாசன் பாடல் வரிகளில் இப்பாடல் அமைந்துள்ளது.

குறித்த பாடலினை ரேகன் ஜூலியன் மற்றும் ஆகர்ஷினி சந்திரகாந்தன் பாடியுள்ளனர்.

காதலர்கள் இருவரின் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இப்பாடல் அமைப்பட்டுள்ளது. இதில் வருண் சேது, மதுஷானி ராஜேந்திரன் மற்றும் ஸ்டீபன் கிருஷ்ணன் நடித்துள்ளனர்.

பெண்ணின் தந்தை காதலுக்கு மறுப்பு தெரிவிக்க வீட்டை விட்டு வெளியேறி காதலன் வீட்டு செல்லும் காதலி, பிறகு காதலனுக்கு அதனால் பிரச்சினைகள் வர அவள் அவன் நன்மைக்காக அவனை விட்டு பிரிந்து செல்லுவதை போன்று இப்பாடலினை நவீன் குட்டி இயக்கியுள்ளார்.

தனது இயல்பான நடிப்பில் மதுஷானி ராஜேந்திரன் மற்றும் வருண் சேது ஆகியோர் இப்பாடலுக்கு வலு சேர்த்துள்ளனர்.