டிசம்பர் 9ல் திரைக்கு வரும் சுவாதியின் பஞ்ச தந்திரம்!

தமிழில் சுப்ரமணியபுரம், கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உட்பட பல படங்களில் நடித்தவர் சுவாதி. கடைசியாக திரி என்ற படத்தில் நடித்தவர் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து நான்கு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்த சுவாதி தற்போது பஞ்சதந்திரம் என்ற தெலுங்கு படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பவர், மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஹர்ஷா புலிபாகா இயக்கத்தில் சுவாதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள பஞ்சதந்திரம் படத்தில் அவருடன் பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, சிவாத்மிகா, ராகுல் விஜய் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

மொத்தம் ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்துள்ள இந்த படத்தின் கதை ஒன்றோடு ஒன்று இணைந்த வாழ்க்கை பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. இந்த பஞ்ச தந்திரம் படம் டிசம்பர் 9ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது