நினைத்தது நடக்காமல் போனது பற்றி கேரளாவில் வருத்தப்பட்ட அல்லு அர்ஜுன்

0

தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றமை யாவரும் அறிந்ததே.

சொல்லப்போனால் கேரளாவில் அதிக செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் இன்று (டிசம்பர் 17) வெளியாகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் பஹத் பாசில் வில்லனாக பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் இந்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா திரைப்படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த திரைப்படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் தான் திரைப்படமாக்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் கொரோனா காரணமாக எங்களால் இங்கே வந்து திரைப்படத்தினை படப்பிடிப்பு செய்ய முடியாமல் போனது. இது திரைப்படத்தின் படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.