மம்முட்டியின் சிபிஐ-5 செட்டுக்கு விசிட் அடித்த ஷோபனா

0

இந்திய சினிமா அளவிலேயே ஒரு திரைப்படத்திற்கு ஐந்தாம் பாகம் உருவாகிறது என்றால் அது மலையாளத்தில் நடிகர் மம்முட்டி நடித்த சிபிஐ டைரி குறிப்பு படத்திற்குத்தான்.

இதுவரை இந்த திரைப்படத்திற்கு நான்கு பாகங்கள் வெளியாகிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இதன் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகிறது குறிப்பிடத்தக்கது. இதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகை ஷோபனா வருகை தந்துள்ளார். மேலும் நடிகர் மம்முட்டியுடன் அங்கே எடுத்துக்கொண்ட செல்பியை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஷோபனா “ஒரு ரசிகையாக எங்கள் கேப்டனை பார்க்க வந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

எண்பது தொண்ணூறுகளில் நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஷோபனா இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.