ஓடிடியில் வெளியாகும் கேசு இ வீட்டின்டே நாதன்

0

மலையாள சினிமாவில் நடிகர் திலீப் மட்டுமே பல வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடிப்பவர் ஆவார். அந்த வகையில் தற்போது தனது நண்பர் இயக்குனர் நாதிர்ஷா இயக்கத்தில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவராக நடித்திருக்கிறார் நடிகர் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை ஊர்வசி. தற்போது கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு செயல்பட துவங்கி இருந்தாலும் இந்த திரைப்படத்தை தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர் தயக்கம் காட்டியுள்ளார்.

அதற்கு காரணம் நடிகர் திலீப் வயதான மனிதராக நடித்துள்ளதால், இந்த திரைப்படத்தை தியேட்டருக்கு வந்து அதிக அளவிலான ரசிகர்கள் ரசிப்பார்களா என்கிற சந்தேகம் தயாரிப்பாளருக்கு எழுந்துள்ளதாம்.

அதனால் இந்த திரைப்படத்தை நேரடியாக ஒடிடியிலேயே வெளியிட முடிவு செய்துள்ளார்கள் இந்த திரைப்படத்தின் குழுவினர். டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த திரைப்படத்தை வரும் டிசம்பர் 24 ஆம் திகதி வெளியிடுகிறது.