தளபதி 67 படத்தில் பகத் பாசில்?

தளபதி 67 படம் குறித்த கேள்விக்கு மலையாள நடிகர் பஹத் பாசில் பதில் அளித்துள்ளார்.

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ படம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வெளியானது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ மற்றும் ஷிரிஷ் தயாரித்த இந்த படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர்கள் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மிஷ்கின், நடிகை த்ரிஷா, கௌதம் மேனன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலையில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் பஹத் பாசில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவரிடம் தளபதி 67 படம் குறித்து, “தளபதி 67 படம் உருவாகி வருகிறது. அதில் நீங்கள் நடிப்பீர்களா?” என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பஹத் பாசில், “தளபதி 67 LCU-வில் உருவாகி வருகிறது. அதில் நான் நடிக்க வாய்ப்பிருக்கலாம்”. என பஹத் பாசில் பதில் அளித்தார்.