தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து ராயன் என்ற படத்தை இயக்கவிருக்கும் தனுஷ், அப்படத்தில் தானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படியான நிலையில் தற்போது தனுஷ் நடிக்கும் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இதன் காரணமாக தனுஷின் இந்த ஐம்பதாவது படம் அவரே இயக்கவிருக்கும் ராயன் படமா? இல்லை எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்கும் படமா? என்பது குறித்த பல்வேறு யூகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.