நடிகர் வடிவேலு தாயார் காலமானார்!

நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி பாப்பா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. மதுரையில் பிறந்ததால், இவருக்கு வைகைப்புயல் என்ற பட்டம் கொண்டு மக்கள் அழைத்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டினாலும், அவரின் குடும்பத்தினர் மதுரையிலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரது தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு இருந்து வந்த சூழலில், திடீரென நேற்றிரவு காலமானார்.