பொங்கலில் துணிவு மற்றும் வாரிசு மோதுவது உறுதி

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் இருவரும் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர். இவர்களது திரைப்படங்கள் சாதாரண நாளில் வெளியானாலே திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பது வழக்கம். அப்படியான நிலையில் பண்டிகை தினங்களில் வெளியானால் இன்னும் அதன் கொண்டாட்டம் கூடுதலாகவே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

வரும் பொங்கலுக்கு அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இரண்டு படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொள்ளுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டி ஒன்று துணிவு மற்றும் வாரிசு என இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாவது உறுதி என தெரிவித்துள்ளார்.

ஆனால் துணிவு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை மற்றும் விஜயின் வாரிசு திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என தெரிவித்துள்ளார். இரண்டுமே பெரிய படங்கள் என்பதால் திரையரங்குகள் சமமாக பிரித்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வருடம் பொங்கல் தல தளபதி பொங்கலாக தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேஸில் ஜெயிக்கப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.