ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை மரணம்

புகழ்பெற்ற பழம்பெரும் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலா லான்ஸ்பரி. 1970களில் பிசியாக இருந்த ஏஞ்சலா 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

1984 முதல் 1996ம் ஆண்டு வரை தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ‘மர்டர்: ஷி ரைட்’ என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் உலக புகழ்பெற்றார். இந்த தொடர் 264 எபிசோட் ஒளிபரப்பப்பட்டது.

ஒவ்வொரு எபிசோட்டுக்கும் 3 லட்சம் டாலர் அவர் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. 6 கோல்டன் குளோப், ஐந்து டோனி விருதுகள், வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.

97 வயதான ஏஞ்லா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.