சார்பட்டா பரம்பரை துஷாரா நீச்சல் குளத்தில் எடுத்த போட்டோ வைரல்

சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் ஜோடி மாரியம்மாவாக நடித்தவர் துஷாரா விஜயன். அதற்கு முன்பே அவர் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்திருந்தாலும் சார்பட்டா படத்தின் மூலம் அவர் பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் அவர். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்தது.

தற்போது துஷாரா நீச்சல் குளத்தில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் படுவைரல் ஆக்கி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரையில் அப்படி நடித்த நடிகையா இது என இந்த கிளாமர் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.