லெஸ்பியன் கேரக்டர் பண்ணனும்னு ஆசை ; திவ்யா பாரதி

நடிகை மற்றும் மொடல் என வலம் வந்த திவ்யா பாரதி நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த பேச்சுலர் படம் மூலம் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். முதல் திரைப்படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தற்போது நடிகர் கதிர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் இவர் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அதிரடி காட்டும் திவ்யா பாரதி கவர்ச்சியான உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். புகைப்படங்களை பகிர்ந்தே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் கலாட்டா தமிழ் யூடியுப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் தனக்கு லெஸ்பியன் அல்லது வில்லியாக தனக்கு நடிக்கும் ஆசை இருப்பதாக தெரிவித்தார்.

அவ்வாறு நடிப்பது மூலம் தமக்கு தன்னம்பிக்கையாக சில கதாபாத்திரங்களை எடுத்து பண்ண முடியும் என்ற நம்பிக்கை எழும் என தெரிவித்திருந்தார்.