நடிகர் அஜித்தின் அசத்தலான புகைப்படம் இணையத்தில் வைரல்

இயக்குனர் எச்.வினோத்துடன் அஜித் நடிக்கும் மூன்றாவது படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேவில் நடக்கும் என்று திட்டமிடப்பட்டது.

இருப்பினும் சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாகவும், தற்போது படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 3 வாரங்கள் நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்பில் சில பைக் ஆக்ஷன் காட்சிகளை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கேன் மற்றும் படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் இந்த பாங்காக் ஷெட்யூலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஏகே 61 ‘ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் அக்டோபருக்குள் முடிவடைந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் திரைக்கு வரலாம் என தயாரிப்பு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் மேலாளர் அவரின் டுவிட்டர் பக்கத்தில் Man and the machine!!! என்ற பதிவுடன் அஜித் குமாரின் புதிய படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது அஜித் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகியுள்ளது.