ஒரே நாளில் அஜித்துக்கு 25 ஆயிரம் ரசிகர் மன்றம்

அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

ஏகே 61 படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடத்தின் இறுதிக்குள் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அமர்க்களம். சரண் இயக்கிய இப்படம் அஜித்தின் திரை வாழ்க்கையில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று.

25 ஆயிரம் ரசிகர் மன்றம்
இப்படம் வெளிவந்த ஒரே நாளில் நடிகர் அஜித்துக்கு சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை இயக்குனர் சரண் அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த சம்பவம் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பலருக்கும் ஷாக் கொடுத்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், 1999ஆம் ஆண்டு வரை காதல் மன்னனாக இருந்த அஜித்தை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது அமர்க்களம் திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.