முதல் நாள் முதல் காட்சி.. விருமன் படத்தை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷன்!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள விருமன் படம் இன்று (12.08.2022) உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

கொம்பன் புகழ் முத்தையா இயக்கியுள்ள விருமன் படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் பாடல் மதுர வீரன் என்ற பாடலைப் பாடி, பாடகியாகவும் அறிமுகமாகியிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக அரங்கேறியது. அதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் வேலை, செய்தியாளர்கள் சந்திப்பும் நடந்து முடிந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.

ட்ரைலரும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.யுவனின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஹிட். அதிலும் குறிப்பாக ’கஞ்சா பூ’ பாடல் இளைஞர்களின் ரிபீட் மோட்.

இந்நிலையில், விருமன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் ரியாக்‌ஷனை இப்போது பார்க்கலாம். படத்தை பார்த்துவிட்டு பலரும் ட்விட்டரில் தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.