தீவிர உடற்பயிற்சியில் ஐஸ்வர்யா ரஜினி

நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்து வருகிறது.