ரோஜா மகளுக்கு கிடைத்த விருது

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, நடிகை ரோஜா தம்பதியருக்கு அன்சு மாலிகா என்ற மகளும், கிருஷ்ண லோஹித் என்ற மகனும் உள்ளார்கள்.

அவர்களில் மகள் அஞ்சு மாலிகா சினிமாவில் நடிக்க வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, மகளின் விருப்பமே எனது விருப்பம் என்று சொன்ன ரோஜா, அவர் விரும்பிய துறையில் செல்வதற்கு தாங்கள் முழு அனுமதி கொடுத்திருப்பதாக அப்போது தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது வெப் டெவலப்பர் மற்றும் கன்டென்ட் ரைட்டரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் அன்சு மாலிகா. அவர் எழுதிய தி பிளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியாகி உள்ளது.

அதையடுத்து தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது அவருக்கு கிடைத்திருக்கிறது.

இதற்கான விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகை சஜன் இந்த விருதினை ரோஜாவின் மகள் அன்சு மாலிகாவுக்கு வழங்கி இருக்கிறார்.

அது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரோஜாவின் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.