குடும்பத்துடன் அமெரிக்கா செல்லும் சூர்யா

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மீனவர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில், அடுத்தபடியாக கோவாவில் ஒரு மாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் விரைவில் சூர்யா தனது மனைவி குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு ஒரு வாரம் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் சென்னை திரும்பியதும் சூர்யா 41ஆவது படத்தின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்குகிறது. இப்படத்தை முடித்ததும் வெற்றிமாறனின் வாடிவாசல், ஞானவேலின் புதிய படம் என இரண்டு படங்களில் அடுத்தடுத்து நடிக்கிறார் சூர்யா.