மீண்டும் இணையத்தில் கசிந்த தளபதி 66 புகைப்படம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் பெரிய எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் விஜய் அடுத்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அவ்வளுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தளபதி 66 திரைப்படம் பக்கா பேமிலி என்டேர்டைனராக உருவாகி வருகிறது, அதன்படி இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று தளபதி 66 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து தளபதி விஜய்யின் புகைப்படம் வெளியாகி பெரிய வைரலானது.

இதற்கிடையே தற்போது மீண்டும் தளபதி 66 புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், அப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.