தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நபரை செருப்பால் அடித்த சன்னிலியோன்: வைரல் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தன்னை நீச்சல்குளத்தில் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ‘வீரமாதேவி’, ‘ஓ மை கோஸ்ட்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் நீச்சல் குளம் அருகே சன்னிலியோன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு ஒருவர் குடை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பக்கமாக வரும் அவருடைய நண்பர் ஒருவர் அவரை நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் தள்ளி விடுகிறார்.

இதனால் முழுவதும் நனைந்து போன சன்னி லியோன் செல்ல கோபத்திற்கு ஆளாகி தன்னை தண்ணீரில் தள்ளி விட்ட நண்பரை நோக்கி தான் அணிந்திருந்த செருப்பை தூக்கி சிரித்துக் கொண்டே எறிகிறார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு 22 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது.